மாதவனின் “ஜி.டி.என்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

மறைந்த தமிழக விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை கதையில் ஜி.டி நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார்.;

Update:2025-12-16 21:40 IST

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' என்ற பெயரில் மாதவன் இயக்கி நடித்திருந்தார். இப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்த இப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இப்படத்தை 'ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்' படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

'ஜி.டி.என்' படத்தில் சத்ய ராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். 'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் விஜய் மூலன் அறிவித்துள்ளார். நிறைவு விழா விருந்து துபாயில் நடந்துள்ளது. அந்தப் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்