’என்டிஆர்நீல்’: மீண்டும் படப்பிடிப்பை தொடங்க தயாராகும் ஜூனியர் என்.டி.ஆர்
இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25 அன்று திரைக்கு வரவுள்ளது.;
சென்னை,
’என்டிஆர்நீல்’ படக்குழு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 'படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்" என்ற தலைப்புடன் ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் சலூன் கடையில் இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் காணப்படுகிறார்கள்.
பிரபாஸுடன் 'சலார்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ''என்டிஆர்நீல்'' படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காந்தாரா 2 பட நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25 அன்று திரைக்கு வரவுள்ளது.