''ஆந்திரா கிங் தாலுகா'': அனிருத் குரலில் முதல் பாடல் - வைரல்
இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;
சென்னை,
ராம் பொதினேனியின் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்திலிருந்து முதல் பாடலான ''நுவ்வுண்டே சாலே'' வெளியாகி உள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகளை ராம் பொதினேனி எழுத, அனிருத் பாடியுள்ளார்.
இப்பாடல் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிப்பில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ''ஆந்திரா கிங் தாலுகா''. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.