''ஓஜி'': வெளியானது ஸ்ரேயா ரெட்டியின் அசத்தல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ஓஜி. சுஜீத் இயக்கி உள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. டிரெய்லர் நாளை வெளியாகிறது.
இந்நிலையில், படக்குழு ஸ்ரேயா ரெட்டியின் அசத்தலான ஆக்ரோஷமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அவர் கீதாவாக நடிக்கிறார்.