தனுஷ் பிறந்தநாளையொட்டி "இட்லி கடை" படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்

நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;

Update:2025-07-28 19:16 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

'இட்லி கடை' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் 'என்ன சுகம்' பாடல் வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதி ஸ்வேதா மோகனுடன் பாடியுள்ளார்.

'இட்லி கடை'படத்தை தொடர்ந்து தேரே இஷ்க் மெயின் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கிடையில், நடிகர் தனுஷ் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'இட்லி கடை' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். 1000 ரசிகர்களுக்கு விருந்தளித்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

Tags:    

மேலும் செய்திகள்