ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு

திரைப்பட தயாரிப்பளருக்கு சரிசமமான பங்கு கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update:2025-10-26 14:34 IST

சென்னை,

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பல்வேறு தனியார் செயலிகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், அத்தகைய டிக்கெட் புக்கிங் நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தரப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் கட்டணம் வசூலிக்கும் Book My Show, Zomato District போன்ற நிறுவனங்கள் அந்தந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு ஷேர் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்யும் நிறுவனம் என மூவருக்கும் சரிசமாக பங்கு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் திரைப்படத்திற்குதான் ஆன்லைன் புக்கிங் செய்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் திரைப்பட தயாரிப்பளருக்கும் சரிசமமான பங்கு கொடுக்கப்பட வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்