'பேட் கேர்ள்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு

அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.;

Update:2025-02-01 19:28 IST

சென்னை,

காக்கா முட்டை விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'பேட் கேர்ள்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அஞ்சலி , ரம்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து  வருகிறது.

அதன்படி, இந்த டீசரில் பிராமண பெண்களை கொச்சை படுத்தும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி தணிக்கை சான்று வழங்கக்கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிட கோரி கோவையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்