"கட்டாளன்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.;

Update:2025-03-03 19:30 IST

இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்தார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவான இப்படம் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக 'கட்டாளன்' என்ற திரைப்படத்தை ஷரீப் முகமத் தயாரிக்கிறார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மைப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி வர்கீஸ் கையில் கோடாரியுடன் எறியும் நெருப்பின் அருகே நிற்கிறார். இத்திரைப்படமும் ஒரு ஆக்சன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்