தயவுசெய்து அதை நிறுத்துங்கள்... - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை

'ஜோதே ஜோதேயாலி' சீரியல் மூலம் தனக்கென பெயரைப் பெற்ற நடிகை மேகா ஷெட்டி.;

Update:2025-09-22 10:31 IST

சென்னை,

'பிக் பாஸ்' கன்னட சீசன் 12 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளநிலையில், அதில் பங்கேற்க உள்ளதாக பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை மேகா ஷெட்டியின் பெயரும் இருந்தது.

இந்நிலையில், அந்த வதந்திக்கு நடிகை மேகா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்ட மேகா ஷெட்டி, "நண்பர்களே... நான் பிக் பாஸுக்கு போகவில்லை..! தயவுசெய்து அப்படி பரப்புவதை நிறுத்துங்கள்.." என்று தெரிவித்திருக்கிறார்.

'ஜோதே ஜோதேயாலி' சீரியல் மூலம் தனக்கென பெயரைப் பெற்ற நடிகை மேகா ஷெட்டி, தற்போது சாண்டல்வுட்டில்(கன்னட சினிமா) அதிகம் விரும்பப்படும் நடிகையாக வலம் வருகிறார்.

டிரிபிள் ரைடிங் படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் நுழைந்த மேகா ஷெட்டி , தற்போது வினய் ராஜ்குமாருக்கு ஜோடியாக 'கிராமாயணம்' படத்தில் நடித்து வருகிறார். பிரஜ்வால் தேவராஜுக்கு ஜோடியாக 'சீட்டா' படத்திலும் நடிக்கிறார்.

பிக் பாஸ் கன்னட சீசன் 12 வருகிற 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார்.



Tags:    

மேலும் செய்திகள்