நிறைவேறுமா பூஜா ஹெக்டேவின் ஆசை...?

தற்போது, ​​பூஜாவுக்கு அடுத்த தெலுங்கு பட வாய்ப்பு வந்துள்ளதாக தெரிகிறது.;

Update:2025-10-20 20:30 IST

சென்னை,

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் மீண்டும் பிஸியாக உள்ளதுபோல் தெரிகிறது. அவர் ஏற்கனவே துல்கர் சல்மானின் அடுத்த தெலுங்கு படமான DQ41-ல் கதாநாயகியாக நடித்து வருகிறார், இதை அறிமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டி இயக்குகிறார்.

தற்போது, ​​பூஜாவுக்கு அடுத்த தெலுங்கு பட வாய்ப்பு வந்துள்ளதாக தெரிகிறது. ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது, பூஜா, நானியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார், தற்போது அந்த ஆசை நிறைவேற போவதுபோல் தெரிகிறது.

ஓஜி இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கியது, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்