நானியின் ’தி பாரடைஸ்’ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்
தி பாரடைஸ் திரைப்படம் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.;
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகரும் நடனக் கலைஞருமான ராகவ் ஜுயல், ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கும் நானியின் தி பாரடைஸ் படத்தில் இணைந்துள்ளார்.
இந்த அதிரடி ஆக்சன் படத்தில் ராகவ் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அவர் நானிக்கு வில்லனாக எப்படி மாறுகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தி பாரடைஸ் திரைப்படம் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி வெளியாக உள்ளது.