தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல மலையாள நடிகர்

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளார்.;

Update:2025-03-30 15:44 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது 'இட்லி கடை, தேரே இஸ்க் மெய்ன்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55-வது படத்தில் உள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தை வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பிரபல மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

 

Tags:    

மேலும் செய்திகள்