’எம்.எஸ்.வி.ஜி’: நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டது எப்படி? - இயக்குனரின் சுவாரசிய பதில்
சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வர பிரசாத் கரு" படத்தை அனில் ரவிபுடி இயக்கி உள்ளார்.;
சென்னை,
அடுத்தாண்டு பொங்கல் சீசன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது. தற்போது சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள "மன சங்கர வரபிரசாத் கரு"(எம்.எஸ்.வி.ஜி) படமும் அதில் இணைந்துள்ளது. இப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் வெங்கடேஷ், கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார்.
அனில் ரவிபுடி இயக்கிய “மன சங்கர பிரசாத் கரு” படத்தை ஷைன் ஸ்க்ரீன்ஸ் மற்றும் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் சாஹு கராபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பின்போது அனில் ரவிபுடி ஊடகங்களுக்கு சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். கதாநாயகி நயன்தாரா பற்றி கேட்டபோது, ’'பலர் கேட்டார்கள், நயன்தாரா எப்படி ஒப்புக்கொண்டார்? என்று, என் நேரம் நன்றாக இருந்தது, அவர் ஒப்புக்கொண்டார்," என்றார்.
அதுமட்டுமின்றி, தெலுங்கு சினிமாவின் நான்கு தூண்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா மற்றும் வெங்கடேஷ் ஆகிய நாலவரையும் ஒன்றாகக் காட்ட வேண்டும் என்று தான் எப்போதும் விரும்பியதாகவும், இந்தப் படத்தில் சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷை ஒன்றாகக் காட்டும் அதிர்ஷ்டம் தனக்குக் கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.