’பிரபாஸ் ரொம்ப நல்ல மனிதர்’- நடிகை ரித்தி

நடிகை ரித்தி குமார், பிரபாஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.;

Update:2025-11-26 09:15 IST

சென்னை,

பான் இந்தியா நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் தி ராஜா சாப். மாருதி இயக்கிய இந்த திகில் நகைச்சுவை படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாகவும், சஞ்சய் தத் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் நடிகை ரித்தி குமார், பிரபாஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,

’பிரபாஸ் ரொம்ப நல்ல மனிதர். ரொம்ப அழகா, நட்பா, சாந்தமா, இருப்பாரு. அவர் உங்களுக்கு சாப்பாடு கொடுப்பார், உங்களைப் பற்றி எல்லாத்தையும் கேட்பார். செட்களில் ரொம்ப ஜாலியாக இருப்பார். எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்