'தலைவர் தம்பி தலைமையில்'...பிராத்தனாவுக்கு குவியும் பாராட்டு
பிராத்தனா இதற்கு முன்பு, ’லவ் டுடே’, ’பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.;
சென்னை,
நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியிருந்தார். கடந்த 15-ம் தேதி திரைக்கு வந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் கல்யாண வீட்டில் அலப்பறை செய்யும் மணமகளாக பிராத்தனா நன்கு 'ஸ்கோர்' செய்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பிராத்தனா இதற்கு முன்பு, தமிழில் ’லவ் டுடே’, ’பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.