வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி நன்கொடை வழங்கிய பிரீத்தி ஜிந்தா
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார்.;
சென்னை,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பிரீத்தி ஜிந்தா ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
கடந்த 24-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தனது பஞ்சாப் கிங்ஸ் குழுவின் நிறுவன நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியுள்ளார். சவுத் வெஸ்டர்ன் கமெண்டின் கீழ் செயல்படும் ராணுவ மகளிர் நல சங்கத்திற்கு (AWWA) இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நடிகை பிரீத்தி ஜிந்தா அடுத்ததாக சன்னி தியோலுக்கு ஜோடியாக 'லாகூர் 1947' என்ற படத்தில் நடித்து வருகிறார். அமீர் கான் தயாரிக்கும் இது, பிரீத்தி ஜிந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படமாகும்.