''கோபி-சுதாகருக்கு பாதுகாப்பும், விருதும் வழங்க வேண்டும்''- திவிக
கோபி சுதாகருக்கு விருது வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.;
கோவை,
கோபி சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்குவதோடு எம்.ஆர் ராதா விருது வழங்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
யூடியூப் பிரபலங்களான கோபி சுதாகர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோபி சுதாகருக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், சிலர் கோபி, சுதாகரை மிரட்டி வருவதால் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு எம்.ஆர் ராதா பெயரில் விருது வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.