தமன்னாவுடன் திரில்லரில் இணைந்த மற்றொரு நடிகை?
இருவரையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள ஆர்வமாக உள்ளனர்.;
சென்னை,
பிரபல நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் திரில்லர் படமான ராகினி எம்எம்எஸின் மூன்றாவது பாகமான ராகினி எம்எம்எஸ் 3-ல் கதாநாயகியாக இணைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் தமன்னாவுக்கு பிறகு மற்றொரு நடிகை நோரா பதேஹி இணைந்திருப்பதாக தற்போதைய தகவல் கூறுகிறது.
தமன்னாவும் நோராவும் இதுவரை ஒன்றாக ஒரு காட்சியில் நடித்ததில்லை என்றாலும், அவர்கள் இருவரும் பாகுபலி: தி பிகினிங்கில் நடித்திருந்தனர். நோரா அப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
இப்போது, இருவரையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸின் கீழ் ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தப் படம், இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோரா தற்போது ராகவா லாரன்ஸின் திகில்-நகைச்சுவை படமான காஞ்சனா 4ல் நடித்து வருகிறார்.