தமிழில் அறிமுகமாகும் ராஜ் தருண்

இந்த படத்தை ’கோலிசோடா’ பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.;

Update:2025-05-11 16:50 IST

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான் 'உய்யாலா ஜம்பாலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராஜ் தருண். இப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை அவர் வென்றார் .

தொடர்ந்து 'புருஷோத்தமுடு', 'குமாரி 21எப்' போன்ற படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தற்போது 'பாஞ்ச்மினார்' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். ராசி சிங் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இன்று ராஜ் தருணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தை 'கோலிசோடா' பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இதன் மூலம் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்