3-வது முறையாக இணையும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா?

மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-12-07 19:36 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் ஏற்கனவே கீதம் கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தை ஷியாம் சிங்கா ராய் பட இயக்குனர் ராகுல் சங்கிரித்யன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்