ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்ட நாகார்ஜுனா - வாயடைத்து போன ராஷ்மிகா மந்தனா
''அனிமல்'', ''புஷ்பா 2''-க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்.;
சென்னை,
''குபேரா'' படத்தில் ராஷ்மிகா மந்தனா தனுஷ், நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். இப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை ஈட்டி வருகிறது.
''அனிமல்'' மற்றும் ''புஷ்பா 2''-க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். ''குபேரா'' படம் வெளியான மூன்று நாட்களில் சுமார் ரூ. 50 கோடி வசூலித்திருக்கிறது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாட படக்குழு விழா ஒன்றை ஏற்பாடு செய்தது. இதில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
அப்போது நாகார்ஜுனா, ராஷ்மிகாவை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டார். இதனை கேட்டதும் ராஷ்மிகா ஆச்சரியத்தில் வாயடைத்து போனார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, "இப்படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பை பார்த்தபோது எனக்கு ''க்சண க்சணம்'' படத்தில் ஸ்ரீதேவியை நினைவுப்படுத்தியது. நேஷனல் கிரஷ் என்று அவர் பெயர் பெற்றதில் ஆச்சரியமில்லை '' என்றார்.