தனது அடுத்த படத்திற்கு தயாராகும் நடிகர் தேஜா சஜ்ஜா

அவரது அடுத்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டியின் 2-ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.;

Update:2025-11-19 21:34 IST

சென்னை,

நடிகர் தேஜா சஜ்ஜா, அனுமான் மற்றும் மிராய் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களுடன் திரையுலகில் அசத்தி வருகிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார்.

அவரது அடுத்த படம் 2021 ஆம் ஆண்டு வெளியான ஜாம்பி ரெட்டியின் 2-ம் பாகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தநிலையில், 2-ம் பாகத்தை அவருடன் பணியாற்றிய வேறொருவர் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

ஜாம்பி ரெட்டி 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மிராய் 2 படத்தின் பணிகளை அவர் விரைவில் தொடங்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்