பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்!- தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிகை ருக்மணி வசந்த கதாநாயகியாக நடிக்க உள்ளார்.;

Update:2025-09-03 03:45 IST

கன்னட சினிமாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில், இவரது நடிப்பில் சமீபத்தில் ஏஸ் படம் வெளியானது. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் வருகிற 5ந் தேதி வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணியில் மதராஸி படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மதராஸி படத்தின் புரமோஷன் பணி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதராஸி படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

பிரமாண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ளதால் ருக்மணி வசந்தை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர கன்னடத்தில் யஷ் ஜோடியாக டாக்ஸிக், ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா ' சாப்டர் 1' உள்ளிட்ட படங்களில் நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்