மலையாளத்தில் அறிமுகமாகும் 'ஜாத்' பட நடிகை
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'ரே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சயாமி கெர்.;
சென்னை,
இளம் பாலிவுட் நடிகையான சயாமி கெர், இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சயாமி கெர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சாய் துர்கா தேஜ் நடிப்பில் வெளியான 'ரே' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் பக்கம் திரும்பினார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சோக்ட்: பைசா போல்டா ஹை' படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் மேத்யூவுடன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ ஆறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிரது. சயாமி கெர் கடைசியாக சன்னி தியோலின் 'ஜாத்' படத்தில் எஸ்ஐ விஜய லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.