'கொம்புசீவி' பட முன்னோட்ட விழாவில் சரத்குமார் வைத்த முக்கிய கோரிக்கை!

'கொம்புசீவி' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-15 10:20 IST

சென்னை,

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ஒரு திரைப்படம் வெளியான பிறகு குறைந்தது 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடிய பின்னரே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று ஓடிடி நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போது, ஒரு படம் வெளியான 4 அல்லது 5 வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்