புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? - தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை
அவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.;
சென்னை,
மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள குழந்தையை உங்களுக்கு தெரிகிறதா?அவர் இப்போது தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முன்னணி கதாநாயகி. அவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றினார், உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்தார்.
அந்த நடிகை வேறு யாறும் இல்லை, ருக்மிணி வசந்த்தான். அவரது தந்தை கர்னல் வசந்த் வேணுகோபால், 2007 ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீரின் உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருதான அசோக சக்ராவைப் பெற்ற கர்நாடகாவைச் சேர்ந்த முதல் நபர் இவர்தான். அவரது தாயார் சுபாஷினி வசந்த் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர். போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வீர் ரத்னா என்ற அமைப்பை இவர் நிறுவினார்.
ருக்மிணி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் அகாடமி ஆப் டிராமாடிக் ஆர்ட்-ல் பயிற்சி பெற்றார். அதன் பிறகு, அவர் மெதுவாக திரைப்படத் துறையில் நுழைந்தார். 2019 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான பீர்பால் டிரையம் மூலம் அறிமுகமானார். பின்னர் சப்த சாகரதாச்சே யெல்லோவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்தப் படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான (கன்னடம்) பிலிம்பேர் விருதைப் பெற்றார்.
சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 அவருக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. அதில், அவர் இளவரசி கனகாவதி வேடத்தில் நடித்தார். ரிஷப் ஷெட்டி இயக்கிய இந்தப் படம், இந்தியா முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, ருக்மணி, இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்திலும், யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.