பாகிஸ்தானுக்கு வருவீர்களா? ...கேட்ட ரசிகர் - ஆலியா பட் சொன்னது என்ன?
ஆலியா பட், சமீபத்தில் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார்.;
மும்பை,
ஆல்பா' என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் திரையில் பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வரும் ஆலியா பட், சமீபத்தில் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார்.
இந்த மேடையில், சர்வதேச சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கோல்டன் குளோப்ஸ் ஹாரிசன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் அவர் பகிர்ந்து கொண்டார்.
அப்போது இந்தியாவை சர்வதேச மேடைகளில் பிரதிநிதித்துவபடுத்துவது அழுத்தமா என்ற கேள்விக்கு, அது அழுத்தம் இல்லை, பெருமை என்று பதிலளித்தார். தொடர்ந்து, பாகிஸ்தானிய ரசிகரின் “பாகிஸ்தானுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஆலியா, “வேலை என்னை எங்கு அழைத்தால் அங்கே போவேன்” என்று கூறினார்.