விவேக் பிரசன்னா நடித்த 'ட்ராமா' படத்தின் 2வது பாடல் வெளியானது
விவேக் பிரசன்னா நடித்த ‘ட்ராமா’ படத்தின் ‘தாலேலோ’ பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் விவேக் பிரசன்னா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் குறும்படத்தில் நடித்துள்ளார்.அவைகளில் பெரும்பாலனவை குணசித்ர வேடங்கள் அல்லது காமெடி வேடங்கள் அவர் தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'ட்ராமா' ஆர் எஸ் ராஜ்பரத் இசை அமைக்கிறார், அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கிறார் தம்பிதுரை மாரியப்பன் இயக்குகிறார். விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி ஆனந்த் நாக் சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்கள் மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் 'ட்ராமா' படத்தின் 'தாலேலோ' பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை பாடகி 'சின்னக் குயில்' சித்ரா பாடியுள்ளார்.