''கூலி'' முன் சைலண்ட் ஆகாத ''சு பிரம் சோ''.... ரூ. 100 கோடி கிளப்பில் நுழைந்து சாதனை
ரூ.4.50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகி 23வது நாளில் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.;
சென்னை,
கன்னடத்தில் பிரபல நடிகரரும் இயக்குனருமாக இருப்பவர் ராஜ் பி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராமப்புற திகில் நகைச்சுவை படமான ''சு பிரம் சோ'', கன்னடத் திரையுலகின் ஏழாவது நூறு கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரூ.4.50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகி 23வது நாளில் ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்துள்ளது.
கேஜிஎப் 2 (ரூ.1,250 கோடி), காந்தாரா (ரூ.450 கோடி), கேஜிஎப் (ரூ.260 கோடி), ஜேம்ஸ் (ரூ.113 கோடி), சார்லி777 (ரூ.103 கோடி), மற்றும் விக்ராந்த் ரோனா (ரூ.100.5 கோடி) உள்ளிட்ட அதிக வசூல் செய்த கன்னட படங்களுக்கு அடுத்ததாக ''சு பிரம் சோ'' உள்ளது.
ராஜ் பி ஷெட்டி, ஷனியல் கவுதம் மற்றும் ஜேபி. துமிநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜேபி துமிநாத் இயக்கி உள்ளார்.