கைவிடப்பட்ட ''மார்கோ 2'' - ''இதுதான் காரணம்'' - உன்னிமுகுந்தன்

ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடிய போதிலும், பல காரணங்களுக்காக சர்ச்சையையும் எதிர்மறையையும் சந்தித்தது.;

Update:2025-06-15 14:53 IST

சென்னை,

மலையாளத்தில் மிகவும் வன்முறை நிறைந்த படமான ''மார்கோ'', உன்னி முகுந்தனுக்கு பரவலான புகழையும் கடுமையான விமர்சனத்தையும் கொடுத்தது.

அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடிய போதிலும், பல காரணங்களுக்காக சர்ச்சையையும் எதிர்மறையையும் சந்தித்தது.

இருந்தபோதிலும், ''மார்கோ 2'' பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்நிலையில், எதிர்பாராத காரணத்தால் ''மார்கோ 2'' வை கைவிடுவதாக உன்னி முகுந்தன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகருக்கு பதிலளித்த அவர், "மன்னிக்கவும், ''மார்கோ'' 2 திட்டத்தை நான் கைவிட்டுவிட்டேன். படத்தை பற்றி அதிகமாக எதிர்மறை கருத்துகள் உள்ளன. ''மார்கோவை'' விட பெரிய மற்றும் சிறந்த படத்தை கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அனைத்து அன்புக்கும் நன்றி" இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இந்த எதிர்பாராத அறிவிப்பு, மார்கோ படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருந்தவர்களை, அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்