மகளின் பெயரை அறிவித்த நடிகை கியாரா அத்வானி

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.;

Update:2025-11-28 13:26 IST

சென்னை,

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தங்கள் குழந்தையின் பெயரை அவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, மகளுக்கு 'சராயா' எனப்பெயரிட்டுள்ளனர். கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

கியாரா அத்வானி கடைசியாக ''வார் 2'' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியை சந்தித்தது. மறுபுறம், சித்தார்த் மல்ஹோத்ரா கடைசியாக ஜான்வி கபூருடன் இணைந்து ''பரம சுந்தரி'' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்