சிம்ரன் சவுத்ரியின் அடுத்த படம்...டீசர் வெளியீடு
இப்படத்தின் மூலம் அவினாஷ் திருவீடுலா நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.;
சென்னை,
சிம்ரன் சவுத்ரி கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படம் வானரா. இப்படத்தின் மூலம் அவினாஷ் திருவீடுலா நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் நந்து வில்லனாக நடிக்கிறார்.
"வானரா" படத்தை சில்வர் ஸ்கிரீன் சினிமாஸ் என்ற பதாகையின் கீழ் அவினாஷ் புயானி, அவபதி ராஜா மற்றும் சி. அங்கித் ரெட்டி ஆகியோர் தயாரித்து வருகின்றனர். விவேக் சாகரின் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
டீசரில், ஹீரோ அவினாஷ் பைக்கில் செல்வதும், அவரைப் பின்தொடர்ந்து பறந்து செல்வதும் காணப்பட்டுள்ளது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.