சந்தீப் கிஷனுக்கு முன்பு 'சிக்மா' கதையை கேட்டது இந்த நடிகரா?

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா.;

Update:2025-11-11 20:15 IST

சென்னை,

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகப் அறிமுகமாகும் முதல் படத்தின் பெயர் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு 'சிக்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி ஆக்சன் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதற்கிடையில், ​​சந்தீப்பை ஜேசன் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, துல்கர் சல்மானை நடிக்க வைக்க விரும்பியதாக இணையத்தில் தற்போது தகவல் பரவி வருகிறது. துல்கருக்கு கதை பிடித்திருந்ததாகவும் , மற்ற படங்கள் காரணமாக, அவர் நடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

'சிக்மா' படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்