கட்டாய ராணுவ பணியை நிறைவு செய்து மீண்டும் இசைக்குழுவில் இணைந்து பாடகர் சுகா

2 ஆண்டு கால கட்டாய ராணுவ பணியை நிறைவு செய்து பாப் பாடகர் சுகா மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்தார்.;

Update:2025-06-21 16:03 IST

இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இசைக்குழுக்களில் தென்கொரியாவின் பிடிஎஸ்-ம் ஒன்று. இளைஞர்களின் உணர்வுகளுடன் ஒன்றிணையும்படியான வரிகளை தங்களது பாடல்களில் புகுத்தியதன் மூலம் உலகம் முழுவதும் பிடிஎஸ் குழு பிரபலமடைந்தனர். அவர்களின் தோற்றமும், பாடல்களும், இசையும் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றது.

தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டு பணியாற்ற வேண்டும். இதில் கே-பாப் கலைஞர்களும் விதிவிலக்கல்ல. அதன்படி பிடிஎஸ் உறுப்பினர்களும் ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி முன்னதாக ஜின், ஜே-ஹோப், ஆர்எம், வி , ஜிமின் மற்றும் ஜங்கூக் ஆகியோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராணுவ பணியை முடித்தனர். இதனிடையே மீதமிருந்த பாடகர் சுகா தற்போது தனது 2 ஆண்டு கால ராணுவ பணியை நிறைவு செய்து மீண்டும் பிடிஎஸ் இசைக்குழுவில் இணைந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்