"கில்லர்" படப்பிடிப்பில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.;
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு 'கில்லர்' எனப்பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு பிரபல ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.
'கில்லர்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியிட்டது.
பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது பிறந்தநாளை 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பு இடத்தில் கோலாகலமாக கொண்டாடினார். திரையுலகில் தனித்துவமான கதைகளையும் செயல்பாடுகளையும் கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்நிகழ்வில் படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. எஸ்.ஜே.சூர்யா தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். 'கில்லர்' விரைவில் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.