தெலுங்கில் தோல்வியை சந்தித்த 'பெருசு' பட நடிகை

கடந்த 16-ம் தேதி வெளியான இப்படத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது.;

Update:2025-10-22 06:12 IST

சென்னை,

தமிழில் வெளியான பெருசு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த சமூக ஊடக பிரபலம் நிஹாரிகா, தற்போது தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். "மித்ர மண்டலி" எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜயேந்தர் எஸ் இயக்கியுள்ளார்.

கடந்த 16-ம் தேதி வெளியான இப்படத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது. நிஹாரிகாவுக்கு மிகப்பெரிய ஆன்லைன் பின்தொடர்பவர்கள் (மூன்று மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள்) இருந்தபோதிலும், அவரால் வரவேற்பைப் பெற முடியவில்லை.

நிஹாரிகா கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பெருசு' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்