சூரியின் “மண்டாடி” படத்தின் ரிலீஸ் அப்டேட்
ரூ.75 கோடி செலவில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படத்தில் சூரி நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ரூ.75 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் கோடைவிடுமுறையில் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் இடம்பெறும் படகு பந்தய காட்சிகள், இதுவரை காணாத புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் திரையில் கொண்டுவர, சர்வதேச ஆக்சன் நிபுணர்களுடன் இணைந்து படக்குழு பணியாற்றியுள்ளது. பிரபல ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். சுமார் 60 நாட்கள் இந்தப் படத்துக்காக அவர் பணியாற்றியுள்ளார்.