'ஸ்பிரிட்' நடிகையின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

’பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக்கில் திரிப்தி டிம்ரி நடித்துள்ளார்.;

Update:2025-05-27 10:07 IST

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி, சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் இணைந்தார்.

இது மட்டுமில்லாமல், 'தடக் 2' படத்திலும் நடித்து வருகிறார். கரண் ஜோகர் தயாரிக்கும் இப்படத்தை சித்தார்த் சதுர்வேதி இயக்குகிறார். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் ரீமேக் ஆகும். இதன் முதல் பாகம் 'சாய்ராத்' என்ற படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருந்தது, ஆனால் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்