வேலை இல்லாமல் வீட்டில் இருப்பது ஜெயிலில் இருப்பது மாதிரி... பிரபல நடிகர்
பைக்கர் படத்தில் மூத்த நடிகர் ராஜசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.;
சென்னை,
தெலுங்கு நடிகர் சர்வானந்த் தற்போது வெற்றிக்காக காத்திருக்கிறார். மனமே படத்திற்குப் பிறகு, அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் பைக்கர். இயக்குனர் அபிலாஷ் ரெட்டி இயக்கிய இந்த ஸ்போர்ட்ஸ் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
மூத்த நடிகர் ராஜசேகர் இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான 'கிளிம்ப்ஸ்' எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த 'கிளிம்ப்ஸ்' வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராஜசேகர், தனது தொழில் வாழ்க்கை குறித்த சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
வேலை இல்லாமல் இருப்பது சிறையில் இருப்பது போன்று இருக்கும் என்று அவர் கூறினார். பைக்கர் படம் தனக்கு மிகுந்த திருப்தியை அளித்திருப்பதாகவும், இந்த கதையை முன்பே காட்டியிருந்தால், தன்னையே ஹீரோவாக நடிக்க வைக்கச் சொல்லிருப்பேன் எனவும் கூறினார்.