''வலிமைக்கு ஆண், பெண் என்று பேதமில்லை'' - 'கோமாளி' பட நடிகை
சம்யுக்தா ஹெக்டே, ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.;
சென்னை,
'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர், சம்யுக்தா ஹெக்டே. அதனைத்தொடர்ந்து 'பப்பி', 'தேள்', 'மன்மத லீலை' படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தாண்டி கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
''ஆண்களைபோல கைகளில் புடைக்கும் நரம்புகளை நாங்களும் விரும்புகிறோம். கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை நாங்களும் கடைபிடிக்கிறோம். வலிமைக்கு ஆண், பெண் என்று பேதமில்லை. 'ஜிம்' மில் வலிமை கொண்டாடப்படுகிறது.
புதிதான முயற்சிகளுக்காக பெண்கள் அங்கீகரிக்கப்படும்போது, தேவையற்ற அச்சுறுத்தல்கள் குறையும். நாங்களும் மனிதர்கள் தான். கடினமாகப் பயிற்சி செய்து, எங்களை உயர்த்தி கொள்கிறோம். பலவீனங்களைப் பலமாக்கி கொள்கிறோம்'' என்று தெரிவித்திருக்கிறார்.