''வெற்றி என்பது பணமோ புகழோ அல்ல''...- ரகுல் பிரீத் சிங்

தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.;

Update:2025-09-01 11:34 IST

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தனது 18 வயதில் 'கில்லி' என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காகும்

அதனைத்தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.

தமிழில் இவர் "தடையற தாக்க, என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, இந்தியன் 2, அயலான்" உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், வெற்றி என்பது புகழையோ பணத்தையோ பற்றியது அல்ல என்று ரகுல் பிரீத் சிங் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,

''வெற்றி என்பது புகழ் அல்லது பணத்தைப் பற்றியது அல்ல. அது நீங்கள் விரும்புவதைச் செய்து அமைதியான வாழ்க்கையை வாழ்வது பற்றியது. சிறுவயதிலிருந்தே என் அப்பாவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒழுக்கம் என்னை எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும்'' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்