வசூலில் சதமடித்த சன்னி தியோலின் 'ஜாத்'

சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் 'ஜாத்';

Update:2025-04-22 10:30 IST

மும்பை,

பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியான படம் 'ஜாத்'

ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும் புகார் எழுந்தன.

இதனையடுத்து, அந்த காட்சிகளை படக்குழு நீக்கியது. இந்நிலையில், இப்படம் வசூலில் சதமடித்திருக்கிறது. அதன்படி, 'ஜாத்' திரைபடம் 12 நாட்களில் ரூ. 102 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்