சூர்யாவின் “கருப்பு” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு
ஆர்.ஜே.பாலாஜியின் ‘கருப்பு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.;
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்திலிருந்து முதல் பாடலான ‘காட் மோட்’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், ‘கருப்பு’ படத்திண் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 23ந் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாயின.
இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா 47’ படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டிசம்பர் மாதத்தில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.