அடுத்த ''பாண்ட் கேர்ள்'' சிட்னி ஸ்வீனியா?
'டூன்' பட இயக்குனர் டெனிஸ் வில்லெனுவே அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்க உள்ளார்.;
சென்னை,
நடிகை சிட்னி, ஹாலிவுட்டில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார். தனக்கு "சவால்" தரும் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், இவர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பாண்ட் கேர்ளாக நடிக்க பரிசீலிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் முக்கிய பெண் கதாபாத்திரங்களுக்கு "பாண்ட் கேர்ள்" என்று பெயர்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'டூன்' பட இயக்குனரான டெனிஸ் வில்லெனுவே அடுத்த 'ஜேம்ஸ் பாண்ட்' படத்தை இயக்க உள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான வில்லெனுவே, 'சிகாரியோ,' 'டூன்,' 'டூன்: பகுதி இரண்டு,' 'பிளேட் ரன்னர் 2049,' மற்றும் 'அரைவல்' போன்ற படங்களுக்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.