தொடர்ந்து ''திகில்'' படங்களில் நடிக்கும் தமன்னா...
தமன்னா சமீபத்தில் திகில் படமான ''ஒடெலா 2''-ல் நடித்திருந்தார்.;
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா சமீபத்தில் திகில் படமான ''ஒடெலா 2''-ல் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மீண்டும் தமன்னா திகில் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது ''ராகினி எம்எம்எஸ் 3'' ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ராகினி எம்எம்எஸ் தொடரின் மூன்றாம் பாகமாகும்.
தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தமன்னாவின் ஹாரர் திரில்லர் படமான ''வான்'' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ராகினி எம்எம்எஸ் 3 பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. கதை தமன்னாவுக்கு பிடித்திருந்ததாகவும் தெரிகிறது. இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.