''கிங்டம்'' நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த விஜய் தேவரகொண்டா - வைரல் வீடியோ

''கிங்டம்'' படம் வருகிற 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update:2025-07-28 09:07 IST

திருப்பதி,

விஜய் தேவரகொண்டாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடித் திரைப்படமான கிங்டம் வருகிற 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளநிலையில், அப்படத்தின் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸுடன் திருப்பதியில் அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சியும் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் 'கிங்டம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், இறுதியாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்