சினிமாவில் எனது இலக்கு அதுதான் - பிரீத்தி அஸ்ரானி

பிரீத்தி அஸ்ரானி சமீபத்தில் ‘கிஸ்' படத்தில் கவின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார்.;

Update:2025-09-28 23:58 IST

குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த பிரீத்தி அஸ்ரானி, 'அயோத்தி' படத்தின் மூலம் கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் ‘கிஸ்' படத்தில் கவின் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘கில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பிரீத்தி அஸ்ரானி நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கிருஷ்ண பலராம் இயக்கும் புதிய படத்தில் முகேன் ராவ் ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "குஜராத்தில் பிறந்தாலும் தமிழ் சினிமா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து பல படங்கள் நடித்து ரசிகர்களை ஈர்க்க விரும்புகிறேன். அதுவே என் இலக்கு" என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்