48 வயது நடிகைக்கு ஜோடியாக 24 வயது ஹீரோ...எந்த படம் தெரியுமா?
48 வயது நட்சத்திர கதாநாயகி 24 வயது நடிகருடன் நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.;
சென்னை,
தற்போது 50 , 60 வயதுடைய ஹீரோக்கள் இளம் கதாநாயகிகளுடன் நடிக்கும்நிலையில், 48 வயது நட்சத்திர கதாநாயகி 24 வயது நடிகருடன் நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தபோதிலும், இரண்டு நட்சத்திரங்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நடிகர் வேறு யாருமல்ல, இஷான் கட்டர்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவுட் கதாநாயகி தபுவுக்கு ஜோடியாக "எ சூட்டபிள் பாய்" தொடரில் இவர் நடித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தத் வெப் தொடர் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அப்போது, இஷானுக்கு 24 வயது. தபுவுக்கு 48 வயது. விக்ரம் சேத் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தொடர், 1950களின் இந்தியாவில் நடக்கும் காதல், அரசியல் மற்றும் குடும்ப நாடகங்களைச் சுற்றி வருகிறது. தற்போது, இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் உள்ளது. இதை மீரா நாயர் இயக்கியுள்ளார்.