தொழில் அதிபருடன் ரகசிய டேட்டிங் செய்து வரும் தனுஷ் பட நடிகை!
தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மே' படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.;
மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், கீர்த்தி சனோன். ‘ஹவுஸ்புல்-4', ‘ஆதிபுருஷ்', ‘க்ரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான ‘மிமி' படத்துக்கு தேசிய விருது பெற்றார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்த ‘தேரே இஷ்க் மே' படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையில் கீர்த்தி சனோன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர் கபீர் பஹியா அவருடன் ரகசியமாக ஊர் சுற்றி வருவதாகவும், அடிக்கடி ‘டேட்டிங்' செல்வதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இருவரும் வெளிநாட்டுக்கு சென்று மனம் விட்டு பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.