‘வேட்டுவம்’ படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்;

Update:2025-10-08 15:06 IST

சென்னை,

"‘வேட்டுவம்' திரைப்படம் அறிவியல் புனைகதை (Science Fiction) படமாக இருக்கும் என இயக்குனர் பா.ரஞ்சித் அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

இந்நிலையில், "‘வேட்டுவம்' திரைப்படம் அறிவியல் புனைகதை (Science Fiction) படமாக இருக்கும் என அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்